மேட்டூர் அணை திறப்பு - முதலமைச்சர் விஜய் ஆலோசனை

காவிரி நதிநீர் விவகாரம், மேகதாது அணை விவகாரம் குறித்தும் அதிகாரிகளிடம் முதலமைச்சர் விஜய் கேட்டறிந்தார்.
மேட்டூர் அணை திறப்பு - முதலமைச்சர் விஜய் ஆலோசனை
Published on

சென்னை தலைமைச் செயலகத்தில் வேளாண், நீர்வளத்துறை செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை ஜூன் 12-ல் திறக்கப்படுவது தொடர்பாக முதலமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். காவிரி நீர், குறுவை சாகுபடி, விவசாயப் பயிர்களுக்கான பயிர் காப்பீடு குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

காவிரி நீர் மேலாண்மை ஆணைய 51-வது கூட்டம் வரும் 28-ந்தேதி டெல்லியில் நடைபெற உள்ள நிலையில், காவிரி நதிநீர் விவகாரம், மேகதாது அணை விவகாரம் குறித்தும் அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com