மேகதாது அணை விவகாரம் - சட்ட நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள முதலமைச்சர் உத்தரவு

தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட தேவையான முன்னெடுப்புகளை மேற்கொள்வது என்று கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
மேகதாது அணை விவகாரம் - சட்ட நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள முதலமைச்சர் உத்தரவு
Published on

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை தடுக்க தமிழக அரசுக்கு உரிமை இல்லை என்று பேசிய கர்நாடக மாநில துணை முதல்-மந்திரியும், நீர்வளத்துறை மந்திரியுமான டி.கே.சிவக்குமாருக்கு தமிழகத்தில் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

காவிரி டெல்டா பகுதிகளை பாலைவனமாக்கும் கர்நாடக அரசின் முயற்சியை தடுத்து நிறுத்திட வேண்டும் என தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் குரல் எழுப்பி வருகின்றனர். இதையடுத்து காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் விஜய் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த், பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட தேவையான முன்னெடுப்புகளை மேற்கொள்வது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இந்நிலையில், மேகதாது அணை விவகாரத்தில் தொடர் சட்ட நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com