மேகதாது அணை விவகாரம் - முதலமைச்சர் விஜய் ஆலோசனை

மேகதாது அணை கட்டும் விஷயத்தில் தமிழகத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க எந்தவித உரிமையும் இல்லை என்று டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.
மேகதாது அணை விவகாரம் - முதலமைச்சர் விஜய் ஆலோசனை
Published on

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசு மிகவும் உறுதியாக உள்ளது. அணை கட்டும் விஷயத்தில் தமிழகத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க எந்தவித உரிமையும் இல்லை என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.

மேலும், மேகதாதுவில் அணை கட்டுவதற்கான திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை விரைவில் மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்போவதாக அவர் அறிவித்துள்ளார்.

இதற்கு தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த ஆலோசனையில் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா மற்றும் துறை சார்ந்த முக்கிய அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com