

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, தவெக தலைவர் விஜய், ஆட்சியமைக்க இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் ஆதரவு கேட்டு கடிதம் எழுதியிருந்தார். இதனை ஏற்று, சிபிஐ கட்சி தவெக ஆட்சியமைக்க தனது முழு ஆதரவை வழங்கியது.
அதனைத்தொடர்ந்து தற்போது சிபிஎம் தனது ஆதரவை தெரிவித்துள்ளது. சிபிஎம் ஆதரவைத் தொடர்ந்து, தவெக கூட்டணியின் பலம் 117 ஆக உயர்ந்துள்ளது. ஆட்சியமைக்க இன்னும் 2 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், விசிகவும் கைக்கோர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2026 சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக 108 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால் ஆட்சியமைக்க தேவையான அறுதி பெரும்பான்மையை பெறவில்லை. இதனால் திமுக கூட்டணி கட்சிகளிடம் கடந்த இரண்டு நாட்களாக ஆதரவுக் கோரி வந்தது. இந்நிலையில் இன்று இரண்டு இடதுசாரி கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளன. விரைவில் விசிகவும் ஆதரவு அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.