தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சராக விஜய் இருப்பது உறுதி - மன்சூர் அலிகான்

லியோ பட விழாவில் தமிழகத்தில் நாளைய தீர்ப்பு என்று கூறினேன். அது நடந்துள்ளது.
Mansoor ali khan - CM Vijay
Published on

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்தில் இணைப்பு விழா இன்று நடைபெற்றது. த.வெ.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான என்.ஆனந்த் முன்னிலையில் முக்கிய பிரமுகர்கள் இன்று த.வெ.க.வில் சேர்ந்தார்கள். இந்த விழாவில் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜூனா, வெங்கட் ரமணன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த இணைப்பு விழாவில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, த.வெ.க.வில் இணைந்தவர்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.

முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கோமதி சீனிவாசன் அந்த கட்சியில் இருந்து விலகி த.வெ.க.வில் இணைந்துள்ளார்.

அ.தி.மு.க.வில் பணியாற்றி வந்த இயக்குனர் ஆர்.வி.உதயகுமார், நடிகர் மன்சூர் அலிகான் ஆகியோரும் த.வெ.க.வில் இன்று சேர்ந்துள்ளனர்

த.வெ.க.வில் இணைந்தது குறித்து மன்சூர் அலிகான் கூறியதாவது:-

நாங்கள் பிரிந்தால் தானே சேருவதற்கு, இணையாமல் இருந்தால் தானே இணைவதற்கு. முதலமைச்சர் விஜய்க்கு ஆரம்பத்தில் இருந்தே நான் ஆதரவு தெரிவித்து வந்தேன். லியோ பட விழாவில் தமிழகத்தில் நாளைய தீர்ப்பு என்று கூறினேன். அது நடந்துள்ளது. இன்று அவரது கரத்தை வலுப்படுத்த கட்சியில் இணைந்துள்ளேன். தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சராக விஜய் இருப்பது உறுதி.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com