விஜய் வருகையால் இளைஞர்களுக்கு அரசியல் ஆர்வம் ஏற்பட்டுள்ளது - மாணிக்கம் தாகூர்

நேர்மையான அதிகாரியான தலைமை செயலாளர் முருகானந்தத்தை மாற்றியது கண்டிக்கத்தக்கது.
விஜய் வருகையால் இளைஞர்களுக்கு அரசியல் ஆர்வம் ஏற்பட்டுள்ளது - மாணிக்கம் தாகூர்
Published on

விருதுநகர்:

விருதுநகரில் மாணிக்கம்தாகூர் எம்.பி. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில கூறியதாவது:-

பெருந்தலைவர் காமராஜர் நினைவு இல்லத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு தேர்தல் பிரசார பணியை தொடங்கி உள்ளோம். வேட்பாளர் விஜய பிரபாகரனின் தேர்தல் பணிமனை திறப்பு விழாவிலும் கலந்து கொண்டேன். தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சேர்ந்ததால் கூட்டணிக்கு கூடுதல் பலம் கிடைத்துள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் என்னை எதிர்த்து போட்டியிட்ட விஜய பிரபாகரனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறேன். இது நான் வைகோவிடம் கற்றுக்கொண்ட பாடம்.

விஜய் வருகையால் இளைஞர்களுக்கு அரசியல் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இதை மறுக்க முடியாது. காங்கிரஸ் என்பது தேச சுதந்திரத்திற்காக பாடுபட்ட கட்சி. மற்றவர்கள் தொடங்குவது காங்கிரஸ் கட்சியல்ல. நேர்மையான அதிகாரியான தலைமை செயலாளர் முருகானந்தத்தை மாற்றியது கண்டிக்கத்தக்கது. நாடாளுமன்றத்தில் தொகுதி மறுசீரமைப்பின் நாடு முழுவதும் 272 தொகுதிகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் 20 தொகுதிகளும், தென் மாநிலங்களில் 66 தொகுதிகளும், வடமாநிலங்களில் 200 தொகுதிகளும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் தென் மாநில எம்.பி.க்களின் கோரிக்கை எதுவும் எடுபடாமல் போய்விடும். இதனை முதலமைச்சர் கண்டித்ததை வரவேற்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com