தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் இன்று பொறுப்பேற்கிறார்

பதவியேற்பு விழாவை தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர்கள் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.
மாணிக்கம் தாகூர்
Published on

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த செல்வப்பெருந்தகை நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக பாராளுமன்ற காங்கிரஸ் கட்சி கொறடா மாணிக்கம் தாகூர் எம்.பி. புதிய மாநிலத் தலைவராக அகில இந்திய காங்கிரஸ் தலைமையால் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மாணிக்கம் தாகூர் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று மாலை 4 மணியளவில் மாநில தலைவராக பொறுப்பேற்க உள்ளார். அவரிடம், முன்னாள் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகையிடம் இருந்து பதவி ஒப்படைக்கப்படுகிறது.

இந்த விழாவுக்கு, அகில இந்திய காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தேசிய செயலாளர் நிவேதித் ஆல்வா, சட்டமன்ற காங்கிரஸ் தலைவரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான ராஜேஷ்குமார், உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். பதவியேற்பு விழாவை தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர்கள் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com