

முதலமைச்சர் விஜய்க்கு மலேசியா பிரதமர் அன்வர் இப்ராஹிம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
தமிழ்நாட்டின் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நண்பர் விஜய்க்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
திரையில் ஏற்று நடித்த கதாபாத்திரத்தை விட மிக உயர்ந்த பொறுப்பை தமிழ்நாட்டு மக்கள் விஜயிடம் ஒப்படைத்துள்ளனர்.
மலேசியாவும் தமிழ்நாடும் பல தலைமுறைகளாக ஆழமான வரலாற்று, கலாச்சார பிணைப்புகளை பகிர்ந்து வருகிறது.
வரும் ஆண்டுகளில் முதலமைச்சர் விஜயுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.