பராமரிப்பு பணி: காட்பாடி-திருப்பதி இடையே பயணிகள் ரெயில்கள் 15 நாட்கள் ரத்து

விழுப்புரத்தில் இருந்து காலை 5.45 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-16854) பகுதிநேரமாக காட்பாடி-திருப்பதி இடையே ரத்து செய்யப்படுகிறது.
பராமரிப்பு பணி: காட்பாடி-திருப்பதி இடையே பயணிகள் ரெயில்கள் 15 நாட்கள் ரத்து
Published on

சென்னை:

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பராமரிப்பு பணி காரணமாக பயணிகள் ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

அதன்படி, திருப்பதியில் இருந்து காலை 6.40 மணிக்கு புறப்பட்டு காட்பாடி செல்லும் பயணிகள் ரெயிலும், காட்பாடியில் இருந்து இரவு 7.25 மணிக்கு புறப்பட்டு திருத்தணி செல்லும் பயணிகள் ரெயிலும் இன்று (வெள்ளிக்கிழமை), 20, 24, 27, மே மாதம் 1, 4, 8, 11, 15, 18, 22, 25, 29, ஜூன் மாதம் 1, 5 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

அதே போல, விழுப்புரத்தில் இருந்து காலை 5.45 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-16854) பகுதிநேரமாக காட்பாடி-திருப்பதி இடையே ரத்து செய்யப்படுகிறது.

திருப்பதியில் இருந்து மதியம் 1.40 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16853) திருப்பதி-காட்பாடி இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com