5 தொகுதிகளில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது!

5 தொகுதிகளில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது .
5 தொகுதிகளில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது!
Published on

2026 சட்டமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ளது.

இக்கூட்டணியில் சிபிஎம் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த 2021 தேர்தலில் 6 இடங்களில் போட்டியிட்ட நிலையில், இந்த முறை இரட்டை இலக்கத் தொகுதிகளை சிபிஎம் எதிர்பார்த்தது.

இருப்பினும், கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்திருப்பதைக் காரணம் காட்டி திமுக 5 இடங்களை மட்டுமே ஒதுக்கியது. இது திருப்தியை அளிக்கவில்லை என்றாலும், அதிமுக-பாஜக கூட்டணியைத் தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த 5 இடங்களை ஏற்றுக்கொண்டதாக பி. சண்முகம் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து தாங்கள் போட்டியிடும் தொகுதிகளையும் சிபிஎம் அறிவித்தது. இந்நிலையில் தாங்கள் போட்டியிடும் ஐந்து தொகுதிகளுக்கான வேட்பாளர்களை சிபிஎம் அறிவித்துள்ளது.

அதன்படி பழனி தொகுதியில் என்.பாண்டி, கந்தர்வகோட்டையில் எம். சின்னதுரை, பத்மநாபபுரம் ஆர்.செல்லசுவாமி, திருவொற்றியூரில் எல்.சுந்தரராஜன், கீழ்வேளூரில் டி.லதா ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com