‘தமிழ்நாடு மக்களின் நலனுக்காக ஒன்றிணைந்து பணியாற்றுவோம்’ - பிறந்தநாள் வாழ்த்து கூறிய விஜய்க்கு உறுதி அளித்த ராகுல்காந்தி!

முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களும் ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
‘தமிழ்நாடு மக்களின் நலனுக்காக ஒன்றிணைந்து பணியாற்றுவோம்’ -  பிறந்தநாள் வாழ்த்து கூறிய விஜய்க்கு உறுதி அளித்த ராகுல்காந்தி!
Published on

ராகுல்காந்தி பிறந்தநாளையொட்டி அவருக்கு முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்தார். இதற்கு நன்றி தெரிவித்த ராகுல்காந்தி, தமிழ்நாடு மக்களின் நலனுக்காக ஒன்றிணைந்து பணியாற்றுவோம் என உறுதி அளித்துள்ளார்.

ராகுல்காந்தி பிறந்தநாள்

நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி பிறந்தநாளையொட்டி அவருக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், 'எனது அன்பு சகோதரர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

இந்தியத் திருநாட்டின் முன்னேற்றத்திற்காகவும், மக்களாட்சி மாண்புகளைக் காத்திடவும், அனைத்துத் தரப்பு மக்களின் நலன்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் தாங்கள், நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும், தங்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றியடையவும், பொதுவாழ்வில் சிறப்புடன் பணியாற்றிடவும் வாழ்த்துகிறேன்' என தெரிவித்தார்.

இதற்கு நன்றி தெரிவித்து ராகுல்காந்தி வெளியிட்ட பதிவில், அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான நமது அர்ப்பணிப்பிலும், நமது ஜனநாயகத்தை வலுப்படுத்துவதிலும் நாம் ஒன்றுபட்டு நிற்கிறோம். மேலும், தமிழ்நாடு மக்களின் நலன், கண்ணியம் மற்றும் ஆசைகளை நிறைவேற்ற நாம் அனைவரும் ஒன்றிணைந்து தொடர்ந்து பணியாற்றுவோம் என கூறி உள்ளார்.

மு.க.ஸ்டாலின் வாழ்த்து

இதேபோன்று முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ராகுல்காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். தாங்கள் நல்ல உடல்நலத்தோடும், மகிழ்ச்சியோடும் திகழ விழைகிறேன் என தெரிவித்தார்.

இதற்கு நன்றி தெரிவித்த ராகுல்காந்தி, இந்தியாவையும், நமது அரசியலமைப்பையும், கூட்டாட்சி முறையையும் பாதுகாப்பதற்கான நமது ஒன்றுபட்ட உறுதிப்பாடு நமக்குத் தொடர்ந்து வழிகாட்டும். இது நமது ஜனநாயகத்தின் ஆன்மாவுக்கான போராட்டம், நாம் வெற்றி பெறும் வரை இதை ஒன்றிணைந்து நடத்துவோம் என தெரிவித்தார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி உள்ளிட்டோரும் ராகுல்காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com