பரபரப்பான தமிழக அரசியல் களம்... த.வெ.க. எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு விடுத்த தலைமை

ஆட்சி அமைக்க பெரும்பான்மையை நிரூபிக்க தமிழக வெற்றிக்கழகம் தீவிர முயற்சி மேற்கொண்டத்தின் பலனாக காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளின் ஆதரவோடு 116 என்ற எண்ணிக்கையை பெற்றுள்ளது.
பரபரப்பான தமிழக அரசியல் களம்... த.வெ.க. எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு விடுத்த தலைமை
Published on

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் மகாபலிபுரத்தில் உள்ள ஹோட்டல் அரங்குக்கு வருமாறு த.வெ.க. தலைமை அழைப்பு விடுத்துள்ளது.

ஆட்சி அமைக்க பெரும்பான்மையை நிரூபிக்க தமிழக வெற்றிக்கழகம் தீவிர முயற்சி மேற்கொண்டத்தின் பலனாக காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளின் ஆதரவோடு 116 என்ற எண்ணிக்கையை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆதரவு பெற்று ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.

இந்த நிலையில், மகாபலிபுரத்தில் உள்ள ஹோட்டல் அரங்குக்கு த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் வருமாறு தலைமை அழைப்பு விடுத்துள்ளது. எம்.எல்.ஏ.க்களின் ஆலோசனைக்கு பிறகு முக்கிய முடிவு அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com