

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் 10 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலைகள் அடங்கும் முன்பாகவே, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் சட்டம் ஒழுங்கு பிரச்சனை, பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதையடுத்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர், உள்துறை செயலாளர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை உள்ளிட்டவற்றை தடுப்பது குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது.