சட்டம் ஒழுங்கு மற்றும் பெண்கள் பாதுகாப்பு - முதலமைச்சர் விஜய் ஆலோசனை

தமிழக காவல்துறை இயக்குநர் சந்தீப் ராய் ரத்தோர், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை ஐ.ஜி. உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றனர்.
சட்டம் ஒழுங்கு மற்றும் பெண்கள் பாதுகாப்பு - முதலமைச்சர் விஜய் ஆலோசனை
Published on

சட்டம் ஒழுங்கு மற்றும் பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக தலைமை செயலகத்தில முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் சாய்குமார், உள்துறை செயலாளர் மணிவாசன், காவல்துறை உயரதிகாரிகள் பங்கேற்றனர்.

தமிழக காவல்துறை இயக்குநர் சந்தீப் ராய் ரத்தோர், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை ஐ.ஜி. உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றனர்.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை உள்ளிட்டவற்றை தடுப்பது குறித்து ஆலோசனை நடைபெறுகிறது.

முன்னதாக, கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் 10 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலைகள் அடங்கும் முன்பாகவே, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெண்கள் பாதுகாப்பில் முதலமைச்சர் விஜய் கவனம் செலுத்த வேண்டும் என்று பல்வேறு கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com