‘எதற்கும் அஞ்சாதவர் கெஜ்ரிவால்’ - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புகழாரம்

அரவிந்த் கெஜ்ரிவால் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.
‘எதற்கும் அஞ்சாதவர் கெஜ்ரிவால்’ - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புகழாரம்
Published on

ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணிக்கு ஆதரவாக இன்று சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அப்போது கெஜ்ரிவால் குறித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,

“அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு போராளி. எதற்கும் அஞ்சாதவர், பாஜக பாசிச ஆட்சியை எதிர்த்து தொடர்ந்து போராடி வருகிறார். மூன்றாவது முறையும் முதலமைச்சராக வரவேண்டியவர். பாஜக அவதூறு வழக்குப் போட்டது, ஆனால் குற்றமற்றவர் என நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டார்.

என்னை தூக்கில் ஏற்றினாலும் உங்களை எதிர்ப்பதுதான் எனது இலக்கு என இருப்பவர் கெஜ்ரிவால். டெல்லியில் பல்வேறு சாதனைகளை, புதிய திட்டங்களை கொண்டுவந்தவர்.

தமிழ்நாடு அரசின் புதுமைப்பெண் திட்டத்தை இங்கு தொடங்கி வைத்தவர் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால்தான். அதனால், கெஜ்ரிவாலுக்கும் நமக்குமான உறவு மிகவும் நெருக்கமானது.

அதனால் அவரை பிரசாரத்திற்கு அழைத்தேன். அழைத்த உடன் மறுப்பேச்சு சொல்லாமல் வந்துள்ளார், அவரை வருக வருக என வரவேற்கிறேன்” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com