சிவகாசி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார் கீர்த்தனா

எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றதற்கான பதிவேட்டில் விஜய் கையெழுத்திட்டார்.
சிவகாசி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார் கீர்த்தனா
Published on

இந்நிலையில், சிவகாசி தொகுதி சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்றவரும், தவெக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாக பதவி ஏற்றார். வெற்றிச் சான்றிதழை எடுத்து வராததால் பதவி ஏற்காமல் சென்ற நிலையில் தற்போது சான்றிதழுடன் வந்து கீர்த்தனா பதவியேற்றார்.

இதேபோல், சான்றிதழை மாற்றி எடுத்து வந்த கே.சி.கருப்பணன் உள்ளிட்ட பிற எம்எல்ஏக்களும் தாமதமாக பதவி ஏற்றுக்கொண்டனர். சி.வி.சண்முகம் எம்.எல்.ஏ.வாக பதவியேற்கவில்லை.

தமிழகத்தின் 17-வது சட்டசபையின் முதல் கூட்டம் இன்று கூடியது. தற்காலிக சபாநாயகர் கருப்பையா தலைமையில் நடைபெறும் சட்டசபை கூட்டத்தொடரில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்றார்.

சட்டசபை கூடியதும் முதலமைச்சர் விஜய்க்கு சபாநாயகர் கருப்பையா வாழ்த்து தெரிவித்தார். தமிழக மக்களுக்காக உழைக்க தன்னை இயந்திரமாய் மாற்றிக்கொண்ட முதல்வரை வணங்குகிறேன் என தற்காலிக சபாநாயகர் புகழாரம் சூட்டினார்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதன் பிறகு எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றதற்கான பதிவேட்டில் விஜய் கையெழுத்திட்டார்.

அவரை தொடர்ந்து அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ், செங்கோட்டையன், வெங்கட்ரமணன், நிர்மல் குமார், ராஜ்மோகன், பிரபு, ஆகியோர் எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்றுக்கொண்டனர்.

தொடர்ந்து திமுக, அதிமுக மற்றும் மற்ற கட்சிகளை சேர்ந்த அமைச்சர்கள் எம்எல்ஏவாக பதவியேற்றுக்கொண்டனர்.

இந்நிலையில், சிவகாசி தொகுதி சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்றவரும், தவெக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாக பதவி ஏற்றார். வெற்றிச் சான்றிதழை எடுத்து வராததால் பதவி ஏற்காமல் சென்ற நிலையில் தற்போது சான்றிதழுடன் வந்து கீர்த்தனா பதவியேற்றார்.

இதேபோல், சான்றிதழை மாற்றி எடுத்து வந்த கே.சி.கருப்பணன் உள்ளிட்ட பிற எம்எல்ஏக்களும் தாமதமாக பதவி ஏற்றுக்கொண்டனர். சி.வி.சண்முகம் எம்.எல்.ஏ.வாக பதவியேற்கவில்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com