அமைச்சர்களின் அறைகள் காலி செய்யப்படுகிறது: கருணாநிதி- மு.க.ஸ்டாலின்-உதயநிதி புகைப்படங்கள் அகற்றம்

புதிதாக பொறுப்பேற்கும் விஜய் தலைமையிலான அரசில் அங்கம் வகிக்க உள்ள அமைச்சர்கள் விரைவில் தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர்களின் அறைகளை பயன்படுத்த உள்ளனர்.
அமைச்சர்களின் அறைகள் காலி செய்யப்படுகிறது: கருணாநிதி- மு.க.ஸ்டாலின்-உதயநிதி புகைப்படங்கள் அகற்றம்
Published on

சட்டசபைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அமோகமாக வெற்றி பெற்றுள்ளார். அவரது கட்சி 108 இடங்களை கைப்பற்றி உள்ளது. இதைத் தொடர்ந்து விரைவில் விஜய் தலைமையில் புதிய அரசு அமைய உள்ளது. இதைத் தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர்களின் அறைகள் அனைத்தும் காலி செய்யப்படுகின்றன.

தி.மு.க. அமைச்சர்கள் அனைவரும் தங்களது அறைகளை வேகமாக காலி செய்து வருகின்றனர். அங்கிருக்கும் கருணாநிதி, மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரது புகைப்படங்களையும் எடுத்து வருகின்றனர்.

இதேபோல் அடையாறில் உள்ள அமைச்சர்களின் இல்லங்களையும் காலி செய்யும் பணி துவங்கி உள்ளது. அமைச்சர்கள் தங்களது பொருட்கள், உடமைகளை எடுத்துச் செல்லும் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

புதிதாக பொறுப்பேற்கும் விஜய் தலைமையிலான அரசில் அங்கம் வகிக்க உள்ள அமைச்சர்கள் விரைவில் தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர்களின் அறைகளை பயன்படுத்த உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com