மகளிர் முன்னேற்றத்துக்காக ஏராளமான திட்டங்களை நிறைவேற்றியது திராவிட மாடல் அரசு- கமல்ஹாசன்

நான் உருவாக்கிய ‘தலைவன் இருக்கின்றான்’ பாடல் ஒலிபரப்பப்பட்டதில் மகிழ்ச்சி. எழுச்சி மிக்க இந்தப் பாடல் விரைவில் உங்களது செவிகளையும் எட்டும்.
மகளிர் முன்னேற்றத்துக்காக ஏராளமான  திட்டங்களை நிறைவேற்றியது திராவிட மாடல் அரசு- கமல்ஹாசன்
Published on

சென்னை:

மக்கள் நீதி மய்யத் தலைவரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து மாபெரும் மகளிர் பேரணி நேற்று சேலம் மாநகரில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் என் அன்புக்குரிய நண்பர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் பொதுச் செயலாளர், விருத்தாச்சலம் சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளர் பிரேமலதா மற்றும் அமைச்சர் பெருமக்களோடு கலந்து கொண்டேன்.

இந்தியாவில் வேறெங்கும் இல்லாத வகையில் மகளிர் முன்னேற்றத்துக்காக ஏராளமான திட்டங்களை நிறைவேற்றியது திராவிட மாடல் அரசு. அந்தச் சாதனைகளைப் பாராட்டி ஆயிரக்கணக்கான பெண்கள் நடத்திய வரலாற்றுச் சிறப்பு மிக்க பேரணியில் நானும் அவர்களோடு சேர்ந்து நடைபோட்டது உணர்ச்சி மிக்க தருணம்.

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி அடையவிருக்கும் மகத்தான வெற்றிக்குக் கட்டியம் கூறும் இப்பெருநிகழ்வில் நான் உருவாக்கிய ‘தலைவன் இருக்கின்றான்’ பாடல் ஒலிபரப்பப்பட்டதில் மகிழ்ச்சி. எழுச்சி மிக்க இந்தப் பாடல் விரைவில் உங்களது செவிகளையும் எட்டும் என்று கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com