கலைஞர் நினைவு நாணயம்- மத்திய அரசு அனுமதி

ரூ.100 மதிப்பில் நினைவு நாணயம் வெளியிடும்படி மத்திய நிதியமைச்சகத்திடம் தமிழக அரசு சார்பில் கடந்த வருடம் கோரிக்கை வைக்கப்பட்டது. கலைஞர் கருணாநிதியின் நூறாவது பிறந்தநாளில் கடந்த ஜூன் 3-ல் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது.
கலைஞர் நினைவு நாணயம்- மத்திய அரசு அனுமதி
Published on

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரான திமுகவின் தலைவருக்காக 'முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் மு.கருணாநிதி' என்ற பெயரில் ஒரு நினைவு நாணயம் வெளியிட தமிழக அரசு விரும்பியது. இதற்காக, ரூ.100 மதிப்பில் நினைவு நாணயம் வெளியிடும்படி மத்திய நிதியமைச்சகத்திடம் தமிழக அரசு சார்பில் கடந்த வருடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நாணயத்தை கலைஞர் கருணாநிதியின் நூறாவது பிறந்தநாளில் கடந்த ஜூன் 3-ல் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. பல்வேறு காரணங்களால் இந்த நாணயம் குறிப்பிட்ட தேதியில் வெளியிட முடியாமல் போனது.

இந்நிலையில் நேற்று நாணயத்திற்கான அனுமதி கோப்பில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கையொப்பம் இட்டதாகத் தெரிகிறது.

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று முன்னாள் முதலமைச்சர் 'முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் மு.கருணாநிதி' என்ற பெயரில் நினைவு நாணயம் வெளியிட மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

ஆங்கிலம் மற்றும் இந்தியில் அவரின் பெயருடன் 'தமிழ் வெல்லும்' என்ற வாசகம் இந்த நாணயத்தில் இடம் பெற உள்ளது. இதற்கான உத்தரவு விரைவில் மத்திய அரசின் கெஜட்டில் வெளியாக உள்ளது. இதற்கான மாதிரி வடிவத்தை தமிழக அரசு வழங்கி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com