சட்டசபை சபாநாயகராக ஜே.சி.டி.பிரபாகர் ஒருமனதாக தேர்வு

ஜேசிடி பிரபாகரை சபாநாயகராக தேர்வு செய்ய முதலமைச்சர் விஜய் முன்மொழிய அமைச்சர் என் ஆனந்த் வழிமொழிந்தார்.
சட்டசபை சபாநாயகராக ஜே.சி.டி.பிரபாகர் ஒருமனதாக தேர்வு
Published on

சட்டசபை கூட்டத்தின் 2-வது நாள் அமர்வு இன்று தொடங்கியது. தற்காலிக சபாநாயகர் கருப்பையா தலைமையில் அவை கூடியது.

சபாநாயகர் தேர்தலில், ஆளும் கட்சியான த.வெ.க. சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றி பெற்ற ஜே.சி.டி.பிரபாகர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்து இருந்தார். துணை சபாநாயகர் பதவிக்கு துறையூர் த.வெ.க. எம்.எல்.ஏ. ரவிக்குமார் வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தார்.

ஜேசிடி பிரபாகரை எதிர்த்து வேறு யாரும் மனு தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். சட்டசபை துணை சபாநாயகராக பட்டியலினத்தை சேர்ந்த ரவிசங்கர் தேர்வு செய்யப்பட்டார்.

ஜேசிடி பிரபாகரை சபாநாயகராக தேர்வு செய்ய முதலமைச்சர் விஜய் முன்மொழிய அமைச்சர் என் ஆனந்த் வழிமொழிந்தார்.

சபாநாயகராக ஜேசிடி பிரபாகர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.

சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, அமைச்சர் செங்கோட்டையன் சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.

இதையடுத்து சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், துணை சபாநாயகர் ரவிசங்கருக்கு எம்எல்ஏக்கள் வாழ்த்துரை தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com