

விஜய் நடித்துள்ள ஜன நாயகன் படத்திற்கு இன்னும் சென்சார் சான்றிதழ் வழங்கப்படவில்லை. அதற்கு முன்னதாகவே படம் லீக் ஆகியுள்ளது. இதற்கு திரைத்துறையினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கூறியதாவது:-
ஜன நாயகன் லீக் இந்திய சினிமாத்துறையை ஆட்டி வைக்கின்ற ஒரு செயல். ஒரு படம் எடுத்த பின்னர், அந்த படத்தின் காப்பி தயாரிப்பாளரிடம் இருக்கும். தயாரிப்பாளரை தவிர்த்து நடிகரிடமோ, நடிகையிடமோ இருக்காது.
சென்சார் போர்டில் போட்டு காட்டுவதற்காக தயாரிப்பாளரிடம் இருந்து டெக்னிசியன்கள் மூலம் கொண்டு போய் காட்டுவார்கள். சென்சார் போர்டில் காட்டுப்படும்போது, அதை காப்பி செய்து வைத்திருக்கலாம். இந்த இரண்டு இடங்களையும் தவிர்த்து வேறு எங்கேயும் இருக்காது.
அப்படின்னா, சென்சார் யார் கன்ட்ரோலில் இருக்கு?. மத்திய அரசு கன்ட்ரோலில் இருக்கு. படம் எடுத்த முதலாளி லீக் செய்யப் போறது கிடையாது. சென்சார் போர்டு யார் கையில் இருக்கு. மத்திய அரசு கையில் இருக்கிறது. மத்திய அரசு யார் கையில் இருக்கு. அமித் ஷா கையில் இருக்கு.
அமித் ஷாவை பொறுத்தமட்டில், இந்தியாவின் திரைத்துறையை மிரட்டுவதற்காகவும், திரைத்துறையில் இருந்து எந்த நடிகர்களும் எந்த தயாரிப்பாளரும் அவர்களுக்கு எதிரான, அவர்களுடைய சித்தாந்தத்திற்கு எதிரான எந்தவொரு நிலையும் எடுக்கக் கூடாது என்பதற்காகவும் அமித் ஷா திட்டம் போட்டு செய்த சதிதான் இது. இதில் அமித் ஷா ஈடுபட்டுள்ளார்.
இது அமைச்சர் முருகன் என்கிற லெவல்ல இல்ல. எல். முருகன் பாவம். அவரை மிக்சர் சாப்பிட்டு, டீ சாப்பிட்டு செல்கிற மந்திரியாகத்தான் வைத்துள்ளார்கள். அவருக்கு அமித் ஷா இவ்வளவு அதிகாரம் கொடுக்கல. அமித் ஷாவின் நேரடி கட்டுபாட்டில் இதை செய்துள்ளனர். இதை செய்தது இந்திய சினிமாத்துறை மிரட்டுவதற்காக.
இவ்வாறு மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.