ஐடி ரெய்டு விவகாரம்: ஆதாரம் வெளியிட்ட செல்வப்பெருந்தகை

வருமான வரித்துறை சோதனை நடத்தியது தவறில்லை. அதை வெளிப்படையாக கூற மறுப்பது ஏன்?
ஐடி ரெய்டு விவகாரம்: ஆதாரம் வெளியிட்ட செல்வப்பெருந்தகை
Published on

ஐடி ரெய்டு சோதனை நடத்தப்பட்டது தொடர்பாக வீடியோ ஆதாரம் வெளியிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி அளித்துள்ளார்.

சோதனை நடத்தவில்லை என வருமான வரித்துறையினர் மறுத்திருந்த நிலையில் ஆதாரம் வெளியிட்டு செல்வப்பெருந்தகை பேட்டி அளித்துள்ளார்.

அப்போது அவர் கூறியதாவது:-

திமுக நிர்வாகி படப்பை மனோகரன் வீட்டில் உள்ள எனது அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை செய்தனர்.

வருமான வரித்துறை சோதனை என்ற பெயரில் துன்புறுத்தினர். சோதனை நடத்தியதற்கான ஆதாரம் உள்ளது.

வருமான வரித்துறை சோதனை நடத்தியது தவறில்லை. அதை வெளிப்படையாக கூற மறுப்பது ஏன்?

வருமான வரித்துறை சோதனையால் தான் ராகுல் காந்தி பரப்புரைக்கு என்னால் செல்ல முடியவில்லை.

எனது ஆதரவாளர்களான பல நிர்வாகிகளின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

சோதனை என்ற பெயரில் வருமான வரித்துறையினர் அட்டூழியம் செய்கின்றனர்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com