

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மாவட்டந்தோறும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்துத் தீவிரத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில் இன்று சீர்காழியில் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்நிலையில் இந்த பிரச்சாரம் தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின்,
தொகுதி மறுவரையறை, மும்மொழிக் கொள்கை வழியாக இந்தித் திணிப்பு, FCRA சட்டத்திருத்தம், உட்கட்டமைப்புத் திட்டங்களில் தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசின் துரோகம் எனப் பேசுவதற்கு எவ்வளவோ 'content' இருந்தாலும், அவற்றைப் பற்றி வாயைத் திறந்தால் டெல்லியின் கோபத்துக்கு ஆளாக வேண்டுமே என அஞ்சி, கண்டதையும் பேசி வருகிறார் பழனிசாமி!
தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகத் துணிச்சலோடு டெல்லியை எதிர்க்கும் இந்த ஸ்டாலின் ஆட்சி வேண்டுமா?" "உரிமைகள் போனால் போகட்டுமென, கைகட்டி, வாய்பொத்தி டெல்லிக்குப் பல்லக்கு தூக்கும் பழனிசாமி ஆட்சி வேண்டுமா?" என மக்களைப் பார்த்துக் கேட்டேன்.
அவர்கள் சொன்னது: பழனிசாமியால் நாங்கள் பட்டதெல்லாம் போதும்! எங்களுக்கு திராவிட மாடல் 2.0-தான் வேண்டும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.