

தொழில் முதலீடுகள் அண்டை மாநிலங்கள் செல்வதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டினர்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் சென்னை சட்டப்பேரவை வளாகத்தில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்திற்கு வர வேண்டிய 25 முதலீடுகள் மகாராஷ்டிரா, ஒடிசாவுக்கு சென்றுள்ளது.
இதனால் தமிழக அரசுக்கு ரூ.3.3 லட்சம் கோடி இழப்பு. 2024ல் மட்டுமே தமிழகத்திற்கு வர வேண்டிய ஏராளமான முதலீடுகளை இழந்துள்ளோம்.
40 நாளில் எந்த திட்டமும் வேறு மாநிலத்திற்கு செல்லவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.