VIDEO: நடிகர் அஜித் குமார் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி

இதன்போது உடன் நடிகை திரிஷாவும் இருந்தார்.
VIDEO: நடிகர் அஜித் குமார் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி
Published on

நடிகர் அஜித் குமாரின் தாயார் இன்று காலமாகியுள்ளார். அவருக்கு வயது 84. அஜித்தின் தாயாரான மோகினி மணி வயது மூப்பு காரணமாக இன்று உயிரிழந்தார்.

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித்குமாரின் இல்லத்தில் அவரது தாயாருக்கு இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது.

இறுதிச்சடங்குகளுக்காக நடிகர் அஜித் துபாயில் இருந்து கிளம்பி சென்னை வந்து சேர்ந்தார்.

இந்நிலையில் முதல்வர் விஜய், அஜித்தின் தாயார் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித்குமார் இல்லத்திற்கு இரவு 9.50 மணியளவில் சென்ற விஜய் அங்கு வைக்கப்பட்டுள்ள அஜித்தின் தயார் மோகினி மணி உடலுக்கு மாலை அறிவித்து மரியாதை செலுத்தினார்.

மேலும் அஜித் மற்றும் குடும்பத்தாருக்கு, முதல்வர் ஆறுதல் தெரிவித்தார். இதன்போது உடன் நடிகை திரிஷாவும் இருந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com