மீனவ குடும்பங்களுக்கு உதவித்தொகை உயர்வு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நாட்டுப்படகுகள் உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ. 2 லட்சமாக உயர்கிறது.ராமேஸ்வரம் பாம்பன் தூக்குப்பாலம் அருகில் மீனவர்களின் கோரிக்கையை ஏற்று தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும்.
மீனவ குடும்பங்களுக்கு உதவித்தொகை உயர்வு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

இலங்கை சிறையில் வாடும் மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்படும் தின உதவி தொகை ரூ.250ல் இருந்து ரூ.350 ஆக உயர்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகு உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாக உயர்த்தப்படுகிறது.

நாட்டுப்படகுகள் உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ. 2 லட்சமாக உயர்கிறது.

ராமேஸ்வரம் பாம்பன் தூக்குப்பாலம் அருகில் மீனவர்களின் கோரிக்கையை ஏற்று தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை மீனவச் சங்கப் பிரதிநிதிகள் சந்திக்க அனுமதி வழங்கிட பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com