தமிழகம் வாழ வேண்டும் என்றால் தி.மு.க. வீழ வேண்டும்: தொகுதி உடன்பாட்டிற்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி பதிவு

தமிழகம் வாழ வேண்டும் என்றால் திமுக வீழ வேண்டும் என்ற தமிழக மக்களைக் காப்பதற்கான உன்னதமான ஒற்றை நோக்கத்தோடு இணைந்துள்ள நமது வெற்றிக் கூட்டணி என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்
தமிழகம் வாழ வேண்டும் என்றால் தி.மு.க. வீழ வேண்டும்: தொகுதி உடன்பாட்டிற்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி பதிவு
Published on

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவியில் குறிப்பிட்டிருப்பதாவது:-

தமிழ்நாட்டின் உணர்வுகளைப் புரிந்து, தமிழக மக்களின் எண்ணங்களை ஈடேற்றி, மக்களைக் காத்து, தமிழகத்தை மீட்கப் போகும் நம் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் நம் தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தையில், பாரதிய ஜனதா கட்சி 27 தொகுதிகளிலும், பாட்டாளி மக்கள் கட்சி 18 தொகுதிகளிலும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் 11 தொகுதிகளிலும் போட்டியிடுவது என தொகுதிப் பங்கீடு உடன்பாடு மகிழ்வோடு கையெழுத்திட்டுள்ளோம்.

தமிழகம் வாழ வேண்டும் என்றால் திமுக வீழ வேண்டும்

என்ற தமிழக மக்களைக் காப்பதற்கான உன்னதமான ஒற்றை நோக்கத்தோடு இணைந்துள்ள நமது வெற்றிக் கூட்டணி, தமிழக மக்களின் ஒருமித்த ஆதரவோடு மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, அஇஅதிமுக-வின் பொற்கால ஆட்சி மீண்டும் அமையப்போவது உறுதி.

நமது கூட்டணி ஒப்பந்தக் கையொப்ப நிகழ்வில் கலந்துகொண்ட மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், மத்திய இணை அமைச்சர் முருகன், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை சவுந்தரராஜன், அன்புமணி ஜான் பாண்டியன், பாரிவேந்தர் ஆகியோருக்கு

இத்தருணத்தில் எனது மனமார்ந்த வாழ்த்துகளை மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

நமது கூட்டணியில் இடம்பெற்றுள்ள இதரக் கட்சிகளுக்குமான இடங்கள் மிக விரைவாக இறுதி செய்யப்படும்.

களம் நமதே!

வெற்றியும் நமதே!

#மக்களைக்_காப்போம்

#தமிழகத்தை_மீட்போம்

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com