தி.மு.க கூட்டணி ஒட்டுப்போட்ட கூட்டணி.. போதையில்லா தமிழகம், பெண்கள் பாதுகாப்புக்கு நாங்கள் உத்தரவரதம் - விஜய்

ஊழல் கறை படியவிடமாட்டேன், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வேன், போதை இல்லாத தமிழகத்தை உருவாக்குவேன்.
தி.மு.க கூட்டணி ஒட்டுப்போட்ட கூட்டணி.. போதையில்லா தமிழகம், பெண்கள் பாதுகாப்புக்கு நாங்கள் உத்தரவரதம் - விஜய்
Published on

சென்னை நுங்கம்பாக்கத்தில் தனியார் ஓட்டலில் த.வெ.க. வேட்பாளர்கள் அறிமுகம் கூட்டம் நடைபெற்றது. வேட்பாளர்கள் அறிமுகத்திற்கு முன்பாக த.வெ.க. தலைவர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

* உடைந்த கண்ணாடியை ஒட்ட வைத்தது போல கிழிந்த துணியை தைத்தது போன்ற ஒட்டுப்போட்ட கூட்டணி தி.மு.க. கூட்டணி.

* உடைந்ததை ஒட்டுவது போல், கிழிந்ததை தைப்பதை போல் ஸ்டாலின் சார் கூட்டணி ஒட்டுப்போட்ட கூட்டணி.

* மக்கள் பணத்தை எடுக்க மாட்டேன், பெண்கள் பாதுகாப்பை உறுதி படுத்துவேன், போதை இல்லாத தமிழகத்தை உருவாக்குவேன்.

* ஊழல் கறை படியவிடமாட்டேன், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வேன், போதை இல்லாத தமிழகத்தை உருவாக்குவேன்.

* உங்கள் குரல் கேட்டால் ஓடி வருவது மட்டுமல்ல, நீங்கள் குரல் கொடுப்பதற்கு முன்பே வரும் ஒருவரை தான் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

* ஊழலில் ஊறிப்போனவர்களுககு ஊழலுக்கு எதிரானவர்களுக்குமான தேர்தல்.

* மக்கள் பணத்தை சுரண்ட மாட்டேன் என்று இன்று வேட்பாளர்கள் கொடுத்தது உறுதி மொழி அல்ல, உத்தரவாதம் என்றார்.

முன்னதாக வேட்பாளர்காளக தேர்வு செய்தவர்களை உறுதி மொழி ஏற்க வைத்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com