

தமிழ்நாட்டின் 14-வது முதலமைச்சராக தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
C.ஜோசப் விஜய் எனும் நான்... என விஜய் கூறும் போது அரங்கமே அதிரும் வகையில் தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர்.
உணர்ச்சி பொங்க முதலமைச்சராக விஜய் பதவி பிரமாணம் செய்துகொண்டார். அப்போது முதல் வரிசையில் அமர்ந்திருந்த விஜயின் பெற்றோர் ஆனந்த கண்ணீரில் விட்டனர்.