

தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அழைப்பு விடுக்காதது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ஆளுநருக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், த.வெ.க. தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்பது தள்ளிப்போவது அவரது தொண்டர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது. இதனால் சமூக வலைத்தளங்களில் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், விஜய் பதவியேற்பது தள்ளிப்போவது தொடர்பாக ஆளுநரை கண்டித்து சென்னை மெரினாவில் போராட்டம் நடத்தப்போவதாக த.வெ.க.வினர் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெரினாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.