வடதமிழகத்தில் வெயில் தாக்கம் அதிகரிக்கும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை மக்கள் வெளியில் வர வேண்டாம்.
வடதமிழகத்தில் வெயில் தாக்கம் அதிகரிக்கும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
Published on

வட தமிழகத்தில் அடுத்த 2 வாரங்களுக்கு வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்றும், வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வட மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பகல் நேர அதிகபட்ச வெப்பநிலை 39 முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக வாய்ப்பு உள்ளது.

காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை மக்கள் வெளியில் வர வேண்டாம். முதியவர்கள், குழந்தைகள், நோயாளிகள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com