

தமிழ்நாட்டில் இன்று 13 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வேலூரில் 106.16 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
தொடர்ந்து, திருத்தணி, திருச்சியில் தலா 104.54, சென்னை மீனம்பாக்கத்தில் 104.36, கரூர் பரமாத்தியில் 103.1 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
மதுரையில் 102.92, தஞ்சை, மதுரை விமான நிலையம் மற்றும் சென்னை நுங்கம்பாக்கத்தில் தலா 102.2 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
இதேபோல், நாமக்கல்லில் 101.3, ஈரோடு, நாகையில் 100.4 மற்றும் பாளையங்கோட்டையில் 100.22 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும் பதிவாகியுள்ளது.