வீட்டில் இருந்து மதிய சாப்பாடு எடுத்து வருகிறார்- முதலமைச்சர் விஜய் செயலை பார்த்து வியக்கும் அதிகாரிகள்

புதிய திட்டங்கள் என்னென்ன கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது போன்ற விவரங்களை கேட்டறிகிறார். தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது சம்பந்தமாகவும் அவர் ஆலோசிக்கிறார்.
வீட்டில் இருந்து மதிய சாப்பாடு எடுத்து வருகிறார்- முதலமைச்சர் விஜய் செயலை பார்த்து வியக்கும் அதிகாரிகள்
Published on

தமிழ்நாட்டின் முதலமைச்சராக கடந்த 10-ந்தேதி த.வெ.க. தலைவர் விஜய் பதவியேற்றார். சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்த அவர், தினமும் தலைமைச் செயலகம் வந்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

முதலமைச்சர் விஜய் தினமும் காலை 9.30 மணிக்கு தலைமைச் செயலகம் வந்துவிடுகிறார். ஒவ்வொரு துறை சார்ந்து அதிகாரிகளை அழைத்து ஆலோசிக்கிறார். என்னென்ன திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது. வருங்கால திட்டங்கள் என்னென்ன நடைமுறைப்படுத்தப்பட உள்ளது போன்ற விவரங்களை கேட்டறிகிறார்.

புதிய திட்டங்கள் என்னென்ன கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது போன்ற விவரங்களை கேட்டறிகிறார். தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது சம்பந்தமாகவும் அவர் ஆலோசிக்கிறார்.

மதிய உணவுக்கு அவர் வீட்டுக்கு செல்வதில்லை. காலையில் வீட்டில் இருந்து வரும்போதே கையோடு சாப்பாடு எடுத்து வருகிறார். தலைமைச் செயலகத்தில் அரசு அதிகாரிகள் சாப்பிடுவது போல் விஜய்யும் மதிய உணவை அவரது அறையிலேயே சாப்பிடுகிறார்.

அதன் பிறகும் தலைமைச் செயலகத்தில் துறை வாரியாக அதிகாரிகளுடன் ஆலோசிக்கிறார். மாலை 5 மணிக்குத்தான் வீடு திரும்புகிறார்.

இதை பார்த்து உயர் அதிகாரிகளும், போலீஸ் அதிகாரிகளும் வியப்படைந்துள்ளனர்.

தமிழகத்தில் ஆட்சி செய்த முதலமைச்சர்கள் மதிய சாப்பாட்டுக்கு வீட்டுக்கு சென்றே சாப்பிடுவார்கள். ஆனால் புதிய முதலமைச்சர் விஜய் தலைமைச் செயலகத்திலேயே சாப்பிட்டுவிட்டு பணி செய்வது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com