கால நிலை மையம் அமைக்க அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

காலநிலை மையத்தை அமைப்பதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் கூடுதல் தலைமைச் செயலாளர் இந்த மையத்திற்கு தலைமை வகிப்பார்.
கால நிலை மையம் அமைக்க அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
Published on

சென்னை:

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

காலநிலை மாற்றத்தின் காரணமாக, மக்கள், விலங்குகள், சுற்றுச்சூழல் சுகாதாரம் ஆகியவற்றுடன் பின்னிப் பிணைந்த சிக்கல்களை எதிர்கொள்வதற்கான ஒரு முன்னோடி முயற்சியாக, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையில் ஒருங்கிணைந்த நல்வாழ்வு மற்றும் காலநிலை மையத்தை அமைப்பதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் கூடுதல் தலைமைச் செயலாளர் இந்த மையத்திற்கு தலைமை வகிப்பார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com