GOLD PRICE TODAY: ஒரே நாளில் மூன்று முறை மாறிய தங்கம் விலை

இன்று ஒரே நாளில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 7600 குறைந்திருந்தது.
GOLD PRICE TODAY: ஒரே நாளில் மூன்று முறை மாறிய தங்கம் விலை
Published on

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் காரணமாக கடந்த வாரத்தில் இருந்து தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்து வந்தது. இதனால் இந்த வாரமும் தங்கத்தின் விலை குறையுமா? உயருமா? என்ற கேள்வி மக்களிடையே நிலவியது.

இதனை தொடர்ந்து வார தொடக்க நாளான இன்று காலை தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடியாக குறைந்தது. சவரனுக்கு ரூ.5,360-க்கும் கிராமுக்கு 670 ரூபாயும் குறைந்து ஒரு கிராம் ரூ.12,950-க்கும் சவரன் ரூ.1,03,600-க்கும் விற்பனையானது.

பிறகு இன்றே ஒரே நாளில் இரண்டாவது முறையாக தங்கம் விலை பிற்பகலில் குறைந்தது. கிராமுக்கு 280 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.12,670-க்கும் சவரனுக்கு 2,240 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனையானது. மொத்தத்தில் தங்கம் விலை இன்று ஒரே நாளில் 7600 ரூபாய் குறைந்ததால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில், இன்று ஒரே நாளில் தங்கம் விலையில் மூன்றாவது முறையாக மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி இன்று காலை, மதியம் என ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 7600 குறைந்த நிலையில், தற்போது ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 5,360 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 1,06,720 என்றும் ஒரு கிராம் தங்கம் விலை ரூ. 13,340 என்றும் மாறியுள்ளது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

22-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,08,960

21-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,08,960

20-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,600

19-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,200

18-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,560

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

22-03-2026- ஒரு கிராம் ரூ.250

21-03-2026- ஒரு கிராம் ரூ.250

20-03-2026- ஒரு கிராம் ரூ.260

19-03-2026- ஒரு கிராம் ரூ.265

18-03-2026- ஒரு கிராம் ரூ.275

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com