இன்று முதல் அதிகாரத்தை பழகப்போகிறது Gen Z தலைமுறை- அமைச்சர் ராஜ்மோகன்

பொறுப்பு ஆளுநர் அர்லேக்கர் புதிய அமைச்சர்கள் 23 பேருக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இன்று முதல் அதிகாரத்தை பழகப்போகிறது  Gen Z தலைமுறை- அமைச்சர் ராஜ்மோகன்
Published on

சென்னை கிண்டி மக்கள் மாளிகையில் இன்று புதிய அமைச்சர்கள் பதவியேற்கும் விழா நடைபெற்றது.

முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் பொறுப்பு ஆளுநர் அர்லேக்கர் புதிய அமைச்சர்கள் 23 பேருக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

தற்போது, அமைச்சர்களுக்கான இலாக்காக்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சரவையில் புதியதாக பொறுப்பேற்றுள்ள இளம் அமைச்சர்கள் குறித்து அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில்," Gen Z தலைமுறை அரசியல் பழகியது.. Gen Z தலைமுறை இன்று முதல் அதிகாரத்தை பழகப்போகிறது.

ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் தமிழக அமைச்சரவையில் ஒலிக்கப்போவது மிகப்பெரிய மாற்றம்.

இந்த மாற்றங்களுக்கெல்லாம் முதலமைச்சர் ஜோசப் விஜய் தான் காரணம்" என்றார்.

அமைச்சர் பதவியேற்பு விழாவில் வந்தே மாதரம், தேசிய கீதத்திற்கு பின் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலித்து தொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு," தமிழ்நாடு அரசு நடத்தும் நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதலில் ஒலிக்கும்" என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com