விரைவில் அனைத்து அரசுப் பேருந்துகளிலும் மகளிருக்கு இலவசப் பயணம்..!- அமைச்சர் விஜய் தமிழன்

குக்கிராமங்களையும் நகரங்களையும் இணைக்கும் வகையில் பேருந்து வசதி.
Minister Vijay Tamizhan
Published on: 

தவெகவின் வாக்குறுதி தொடர்பான கேள்விக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய் தமிழன் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டின் அனைத்து அரசு பேருந்துகளில் மகளிருக்கான இலவச பயணம் குறித்து முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார்.

தமிழக மக்கள் ஏசி பேருந்தில் பயணிக்க வேண்டும் என முதலமைச்சர் விரும்புகிறார் என போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய் தமிழன் தெரிவித்துள்ளார்.

வரும் காலங்களில் போக்குவரத்துத்துறைக்கு ஏசி பேருந்துகள் அதிகளவில் வாங்கப்படும்.

போக்குவரத்துத்துறையின் வருவாயை பெருக்க செயல் திட்டங்களி வகுத்து ஒவ்வொன்றாக நடைமுறைப்படுத்தப்படும்.

குக்கிராமங்களையும் நகரங்களையும் இணைக்கும் வகையில் பேருந்து வசதியை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com