சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: அருணாசலேஸ்வரர் கோவிலில் லட்டு பிரசாதம் நிறுத்தம்

விற்பனைக்காக தயார் செய்யப்படும் முறுக்கு, அதிரசம் ஆகியவையும் நிறுத்தப்பட்டன.
சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: அருணாசலேஸ்வரர் கோவிலில் லட்டு பிரசாதம் நிறுத்தம்
Published on

திருவண்ணாமலையில் பிரசித்திப் பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு கடந்த 3 ஆண்டாக லட்டு பிரசாதம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்த லட்டுகள் அனைத்தும் கோவில் நிர்வாகம் சார்பில் தயாரிக்கப்படுவதுடன் முறுக்கு, அதிரசம் உள்ளிட்ட பிரசாதங்களும் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்நிலையில், ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றத்தால் வணிக கியாஸ் சிலிண்டர்கள் விநியோகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் திருவண்ணாமலை கோவிலில் இலவச லட்டு தயாரிக்கும் பணியில் சிக்கல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு இலவசமாக லட்டு தயாரித்து வழங்குவதை நிறுத்தியுள்ளது. விற்பனைக்காக தயார் செய்யப்படும் முறுக்கு, அதிரசம் ஆகியவையும் நிறுத்தப்பட்டுள்ளன.

விறகு அடுப்பு மூலம் லட்டு தயாரிக்க அரசின் அனுமதியை கோவில் நிர்வாகம் கேட்டுள்ளதாகத் தெரிகிறது. அனுமதி கிடைத்ததும் லட்டு தயாரிக்கும் பணி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com