அகமதாபாத்தில் பார்வையாளர்களை கவரும் பென்குயின்கள்

கடல் வாழ் உயிரினங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ள இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அகமதாபாத் அறிவியல் நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பென்குயின்கள்
பென்குயின்கள்
Published on

அகமதாபாத்:

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள அறிவியல் நகரில் நீர்வாழ் கண்காட்சியகம் செயல்படுகிறது. அண்மையில் புதிய வரவாக ஐந்து பென்குயின்கள் வந்துள்ளன.   ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து இவை வரவழைக்கப்பட்டுள்ளன. ஆப்பிரிக்க பென்குயின்கள் மிதமான காலநிலையிலும் வாழக்கூடியவை. 

இங்கு அவைகளின் வாழ்விடம் 18 டிகிரி சென்டிகிரேடு வெப்ப சூழலில் பராமரிக்கப்படுகிறது என்று நீர்வாழ் கண்காட்சியக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பென்குயின்களை பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இதற்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் சிறப்பாக இருப்பதாக சுற்றுலாப் பயணிகள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com