

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பயணிகளின் வசதிக்காக திருச்சி-பெங்களூரு இடையிலான எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை நீட்டிக்கப்படுகிறது.
அதன்படி, திருச்சியில் இருந்து வருகிற 14, 21, 28 ஆகிய தேதிகளில் காலை 6.15 மணிக்கு பெங்களூருவிற்கு சிறப்பு ரெயில் (வண்டி எண்-06007) இயக்கப்படுகிறது. அதே தேதியில், பெங்களூருவில் இருந்து மதியம் 3 மணிக்கு திருச்சிக்கு சிறப்பு ரெயில் (06008) சேவையும் நீட்டிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.