

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பயணிகளின் வசதிக்காக சென்னை சென்ட்ரலில் இருந்து போத்தனூருக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் மேலும் நீட்டிக்கப்படுகிறது.
அதன்படி, போத்தனூரில் இருந்து காலை 7.40 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-06028) வருகிற 20, 21, 23, 28, 29, 30 மற்றும் ஜூன் 3, 4, 5 ஆகிய தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
அதே தேதிகளில், சென்னை சென்ட்ரலில் இருந்து போத்தனூருக்கு செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலும் (06027) நீட்டிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.