சாலையில் நடந்து செல்லும் பள்ளி மாணவிகளிடம் அத்துமீறல்- என்ஜினியர் கைது

தினேஷ்குமார் இதுவரை 25-க்கும் மேற்பட்ட பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபட்டு போலீசில் சிக்காமல் தப்பியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சாலையில் நடந்து செல்லும் பள்ளி மாணவிகளிடம் அத்துமீறல்- என்ஜினியர் கைது
Published on

சென்னை எம்.ஜி.ஆர் நகர் அடுத்த நெசபாக்கம் அம்மன் நகர் பகுதியில் புதிய கட்டிடம் கட்டுமான பணி நடந்து வருகிறது.

இங்கு என்ஜினியர் இளங்கோவன் மேற்பார்வையில் கட்டிட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் பள்ளி முடிந்து வீடு திரும்பும் மாணவிகள் மற்றும் பெண்களை வழிமறித்து சில்மிஷத்தில் ஈடுபட்டு ஆபாச சைகை காட்டி அத்துமீறலில் ஈடுபட்டார்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த இளங்கோவன் கூச்சலிட்டபடியே அந்த வாலிபரை பிடிக்க விரட்டியதால் ஆத்திரமடைந்த மர்ம வாலிபர் தகாத வார்த்தைகளால் பேசி இளங்கோவனுக்கு மிரட்டல் விடுத்தபடியே அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றுவிட்டார்.

உடனடியாக இதுகுறித்து எம்.ஜி.ஆர் நகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவு காட்சிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் பதிவு எண்ணை வைத்து நடத்திய விசாரணையில் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு தப்பியது கொளத்தூர் பகுதியை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினியரான தினேஷ்குமார் (35)என்பது தெரிந்தது. அவரை பெண் வன்கொடுமை உள்ளிட்ட 4பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தினேஷ்குமார் பிரபல ஐ.டி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர் மதிய நேரத்தில் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு ஆட்கள் நடமாட்டம் இல்லாத சாலைகளில் நடந்து செல்லும் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்களை குறி வைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வருவது வழக்கம். தினேஷ்குமார் இதுவரை 25-க்கும் மேற்பட்ட பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபட்டு போலீசில் சிக்காமல் தப்பியுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com