

தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்ற மாணவர் ஒருவர் சுவீடனில் உள்ள KTH பல்கலைக்கழகத்தில் MS பட்டம் பெற்றிருந்தது குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் "எங்கோ தென்காசி மாவட்டத்தின் ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்ற நான், இன்று, சுவீடனில் உலகின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களுள் ஒன்றான KTH ல் MS பட்டம் பெற்றிருக்கிறேன். இந்தப் பட்டத்தை தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். @mkstalin" எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல் அமைச்சருமான மு.க. ஸ்டாலின் பதில் அளித்துள்ள பதிவில் "எனக்குச் சமர்ப்பிக்கிறேன்னு சொல்றதை விட, உங்க பெற்றோருக்குச் சமர்ப்பிக்கிறதுதான் சரியா இருக்கும். உங்களை மாதிரி படிச்சு முன்னேற விரும்புற இளைஞர்களுக்கு நீங்க ஒரு guide-ஆ இருந்து வழிகாட்டுனீங்கனா அதுதான் எனக்கு மகிழ்ச்சி. நீங்க இன்னும் பெரிய உயரங்களை அடையவும் புகழைப் பெறவும் வாழ்த்துகள் தம்பி!" எனக் குறிப்பிட்டுள்ளார்.