

தமிழ்நாட்டில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஏப்.23ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. நாளை வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி ஆகியோர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
தமிழ்நாட்டில் மீண்டும் திமுக கூட்டணியே ஆட்சிக்கு வரும் என பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன. எதிர்க்கட்சியாக மீண்டும் அதிமுக கூட்டணி வரும் என்றும், புதிதாக களத்திற்கு வந்துள்ள நடிகர் விஜய்யின் தவெக 10 முதல் 30 தொகுதிகளை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியும் இளைஞர்களிடையே நல்ல ஆதரவைக் கொண்டுள்ளது. இதனால் நாம் தமிழரும் சில தொகுதிகளை கைப்பற்றலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது ஆளுங்கட்சியாக உள்ள திமுக, 2021 சட்டமன்றத் தேர்தலில் 133 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியில் உள்ளது.