

பெரம்பூர் தொகுதியில் தேர்தல் மன்னன் பத்மராஜன் போட்டியிட முடிவு செய்து இன்று மனு தாக்கல் செய்ய வந்தார். அம்பேத்கர் கல்லூரி வளாகத்தில் உள்ள தேர்தல் அதிகாரியிடம் அவர் மனு தாக்கல் செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், நான் இப்போது 254-வது முறையாக மனு தாக்கல் செய்து உள்ளேன். 1988-ம் ஆண்டு முதல் தொடர்ந்து நடைபெற்று வரும் பல்வேறு தேர்தல்களில் போட்டியிட மனு செய்துள்ளேன். மறைந்த பிரதமர் வாஜ்பாய், அப்துல் கலாம் முதல் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வரை அவர்களுக்கு எதிராக தேர்தலில் போட்டியிட மனு செய்துள்ளேன். இதுவரையில் தேர்தல் செலவிற்காக ஒரு கோடி ரூபாய் செலவு செய்துள்ளேன்.
பஞ்சர் கடை நடத்தி வரும் சாதாரண குடிமகனான நான் உலக கின்னஸ் சாதனை புரிவதற்காக இதுபோன்று தொடர்ந்து வேட்புமனுவை தாக்கல் செய்து வருகிறேன் என்றார்.