Dress Code: விளக்கமளித்த அண்ணாமலை

பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலையும் விஜய் அணியும் உடை பாணியில் உடை அணிந்து வந்து வாக்கினை செலுத்தியதாக இணையதளங்களில் வைரலானது.
Dress Code: விளக்கமளித்த அண்ணாமலை
Published on

தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கிய காலை 7 மணியில் இருந்தே வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

இதனிடையே, முதல் முறை வாக்காளர்கள், மாற்றம் வேண்டும் என்று கூறும் வாக்காளர் மற்றும் த.வெ.க. ஆதரவாளர்கள் பலரும் விஜய் அணியும் உடை பாணியில் உடை அணிந்து வந்து வாக்கு செலுத்தி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

இதனிடையே, பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலையும் விஜய் அணியும் உடை பாணியில் உடை அணிந்து வந்து வாக்கினை செலுத்தியதாக இணையதளங்களில் வைரலானது. இதுகுறித்து விளக்கம் அளித்த அண்ணாமலை,

காவல்துறையில் இருந்ததால் எப்பவும் காக்கி பேண்ட், அரசியலுக்கு வந்த பிறகு வெள்ளை சட்டை. வெள்ளை சட்டை, காக்கி பேண்ட் பல நேரம் போட்டுக்கொண்டு தான் இருக்கிறேன். ஜெகன்மோகன் ரெட்டி இதே ட்ரெஸ் போடுகிறார். விஜய் கூட இந்த ட்ரெஸ் கோட் போடுகிறார். என் ட்ரெஸ் கோட்-க்கும் எந்த குறியீட்டுக்கும் சம்பந்தமில்லை என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com