ஆளுநரை எதிர்க்க விஜய்க்கு துணிவு உள்ளதா? - ஆளூர் ஷா நவாஸ் கேள்வி

பாஜகவை எதிர்க்கும் கொள்கை உறுதியும், துணிவும் விஜய்யிடம் உள்ளதா? என விசிக நிர்வாகி ஆளுர் ஷா நவாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆளுநரை எதிர்க்க விஜய்க்கு துணிவு உள்ளதா? - ஆளூர் ஷா நவாஸ் கேள்வி
Published on

2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், ஆட்சியமைக்கத் தேவையான 118 இடங்கள் இன்னும் கிடைக்கவில்லை. போதிய பெரும்பான்மை குறித்த ஆதாரங்களைச் சமர்ப்பிக்கும் வரை பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுக்க முடியாது எனத் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தெரிவித்துள்ளார்.

இதனால் இன்று நடைபெறவிருந்த விஜய்யின் பதவியேற்பு விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆளுநரை எதிர்க்கும் துணிவு விஜய்க்கு இருக்கிறதா என விசிக நிர்வாகி ஆளூர் ஷா நவாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ளப் பதிவில்,

“தனிப்பெரும் கட்சியாக தவெக வந்த பிறகும், ஆட்சி அமைக்க இடையூறு செய்கிறார் ஆளுநர். இதைக் கண்டிக்க அஞ்சுகிறது தவெக. இதுவே 108 எண்ணிக்கை திமுகவிடம் இருந்து, ஆளுநர் இப்படி இழுத்தடித்தால் என்ன நடந்திருக்கும்? சட்டமன்றத்தில் ஆளுநர் உரையின் போது ஆர்.என். ரவிக்கு நடந்தது போல் நடந்திருக்கும். ஆளுநரை எதிர்ப்பது என்பது பாஜகவை எதிர்ப்பதாகும். அதற்கு கொள்கை உறுதியும் துணிவும் வேண்டும். அது உள்ளதா விஜயிடம்?” என குறிப்பிட்டுள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com