

திருவள்ளூர் மாவட்டம் பெருஞ்சேரியில் நடைபெறும் இந்திய கூட்டணி பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது ராகுல் காந்தி உரையாற்றியதாவது:-
ஆர்எஸ்எஸ், பாஜகவால் அழிக்க முடியாது, தொட முடியாது ஆயிரமாயிரம் ஆண்டுகள் பழமையான கலாச்சாரத்தை கொண்டது தமிழ்.
ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக அடிப்படையிலேயே தமிழ்நாட்டிற்கும் தமிழ் மக்களுக்கும் எதிரானது என்பது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
பாஜகவும், ஆர்எஸ்எஸூம் மக்களை புறக்கணிக்கிறார்கள். ராணுவம் இல்லாமல் மத்திய பாஜக அரசு போர் செய்கிறார்கள்.
அதிமுக என்ற ஒரு கட்சியே தற்போது தமிழ்நாட்டில் இல்லை. அதிமுக என்ற கட்சியை பாஜக முடித்துவிட்டது.
அதிமுக தலைவர்களை கட்டுப்படுத்துகிறது பாஜக. ஊழல் புகார்களால் மோடி, அமித் ஷாவிடம் அதிமுகவினர் சரணடைந்துள்ளனர்.
ஒரு காலத்தில் திமுகவுக்கு இணையாக இருந்த கட்சி அதிமுக, தற்போது பாஜகவின் முகமூடி போன்ற கட்சிதான் அதிமுக.
தமிழர்கள் யார் என்பதும் அவர்களுக்கு தமிழ்மொழி எவ்வளவு முக்கியம் என்பதும் பாஜகவுக்கு புரியவில்லை.
தமிழர்களையும் தமிழையும் பாஜகவால் ஒன்றும் செய்ய முடியாது.
கூட்டணி கட்சியான அதிமுகவை பாஜக மிரட்டுகிறது. ஆனால் நாங்கள் கூட்டணி கட்சிகளை மிரட்டியதில்லை.
மோடி, அமித் ஷா உத்தரவை செயல்படுத்தும் ஒருவரை தமிழ்நாட்டின் முதல்வராக்க பாஜக நினைக்கிறது.
அமெரிக்க அதிபர் டிரம்பிடம் மோடி சரணடைந்தது போல் டெல்லியிடம் சரணடையும் முதலமைச்சர் பாஜகவுக்கு வேண்டும்.
டெல்லியிடம் சரணடையும் முதல்வர் வேண்டுமா?டெல்லியிலிருந்து தமிழ்நாட்டை ஆளப் பார்க்கிறார்கள்.
பாஜகவின் தாக்குதலில் இருந்து திமுகவும் இந்தியா கூட்டணியி கட்சிகளின் சகோதரர்களும் தமிழ்நாட்டை காக்கின்றனர்.
உங்கள் ஆதரவை இந்தி கூட்டணிக்கு தரவேண்டும். திமுக, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.