காவல் மரணங்களைப் பற்றி பேச திமுக-விற்கு கொஞ்சமாவது அருகதை இருக்கிறது? ஒட்டுண்ணி ரகுபதி என விமர்சித்து அ.தி.மு.க. பதிலடி

2021 முதல், காவல் மரணங்களை ஒடுக்க என்ன நடவடிக்கை எடுத்துக் கிழித்தது மு.க.ஸ்டாலின் திமுக அரசு? என அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது
காவல் மரணங்களைப் பற்றி பேச திமுக-விற்கு கொஞ்சமாவது அருகதை இருக்கிறது? ஒட்டுண்ணி ரகுபதி என விமர்சித்து அ.தி.மு.க. பதிலடி
Published on

அதிமுக சார்பில் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

சாத்தான்குளம் வழக்கில் காவலர்கள் மீதான குற்றத்தை உறுதி செய்துள்ள நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.

இந்த வழக்கில் எந்த ஒளிவு மறைவின்றி CBI விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்ட எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அஇஅதிமுக அரசின் நடவடிக்கையின் விளைவாக இந்த நீதி கிடைத்துள்ளது.

எங்களின் ஆட்சியில், நாங்கள் CBI-க்கு மாற்றிய வழக்கில், நாங்கள் சமர்ப்பித்த ஆதாரங்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் நீதி கிடைத்துள்ளது.

இதில் திமுக என்ன செய்தது என வரிந்துகட்டிக் கொண்டு வருகிறது? முதலில், காவல் மரணங்களைப் பற்றி பேச திமுக-விற்கு கொஞ்சமாவது அருகதை இருக்கிறது?

நடவடிக்கை எடுத்து, தீர்ப்பை உறுதி செய்த உணர்வோடு, சில கேள்விகளை திமுக-விற்கும், அறிக்கை என்ற பெயரில் வழக்கம் போல அடிவாங்க வந்திருக்கும் ஒட்டுண்ணி ரகுபதிக்கும் முன்வைக்க விழைகிறோம்.

2021 முதல், காவல் மரணங்களை ஒடுக்க என்ன நடவடிக்கை எடுத்துக் கிழித்தது மு.க.ஸ்டாலின் திமுக அரசு?

திமுக ஆட்சியில் நடைபெற்ற 30-க்கும் மேற்பட்ட காவல் மரணங்களே திமுக அரசின் லட்சணத்திற்கு சாட்சி!

#ஜெய்பீம் திரைப்படம் பார்த்து 2 நாட்கள் தூங்காமல் உலுக்கிப்போன உங்கள் தலைவரின் உள்ளம், அவரது ஆட்சியில் உயிரிழந்தோருக்காக ஒருமுறையாவது உருகியதா?

விக்னேஷ் (எ) விக்னா காவல் மரணத்தை, வயிற்றுபோக்கு எனக் கொஞ்சம் கூட வெட்கமின்றி சட்டமன்றத்திலேயே பச்சைப்பொய் பேசியவர் தானே உங்கள் தலைவர் பொம்மை முதல்வர் ஸ்டாலின்?

மடப்புரம் அஜித்குமார் மரணத்தில், ஒரு அரசு செய்யக்கூடாத அத்தனைக் கேவலங்களையும் அரங்கேற்றிய பொறுப்பற்ற முதல்வராக இருந்தவர் யார்? “Sorry மா” என்று சொல்லி, CBI விசாரணை தேவையில்லை என்று வாதிட்டுக்கொண்டு இருந்தனர் தானே இந்த பொம்மை முதல்வர்? அஇஅதிமுக களத்தில் இறங்காவிட்டால், வழக்கை இழுத்து மூடத்தானே செய்திருப்பீர்கள்? நீங்கள் எல்லாம் காவல் மரணங்கள் பற்றி பேசலாமா?

இப்படி திமுக-வின் ஐந்தாண்டு அக்கிரம ஆட்சியில், காவல்துறை அராஜகம் அனைத்திற்கும் தலையாட்டிக் கொண்டிருந்த பொம்மையாக தானே உங்கள் ஸ்டாலின் இருந்தார்?

ஜெயராஜ், பெனிக்ஸ் மரணத்திற்கான நீதி, எங்கள் நடவடிக்கையால் வந்துவிட்டது.

சத்திய நாராயணன், மணிகண்டன், பிரபாகரன், கலைமான், விக்னேஷ், தங்கமணி, ராஜசேகர், அஜித்குமார், ஆகாஷ் உள்ளிட்ட உங்கள் ஆட்சியில் காவல் அராஜகத்தால் உயிர்நீத்த நபர்களுக்கான, அவர்களின் குடும்பங்களுக்கான நீதியையும் விரைவில் அமையவுள்ள அதிமுக அரசு பெற்றுத் தரும்!

குற்றவாளிகள் யாராக இருந்தாலும், கூண்டேறப் போவது உறுதி!

#தமிழகம்_வாழவேண்டும் !

#திமுக_வீழவேண்டும் !

இவ்வாறு எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com