தி.மு.க எம்.பி ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த் த.வெ.க.-வில் இணைவு

தவெக தலைமை அலுவலகத்துக்கு 2வது முறையாக விஜய் வருகை தந்துள்ளார்.
DMK MP Jagadhratshakan- Sundeep Anand
Published on

திமுக எம்பி ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த் தவெகவில் இணைந்தார். பனையூர் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் விழாவில் அமைச்சர் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.

முதலமைச்சர் விஜய் வருகை

சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் மாற்றுக் கட்சியினர் இணையும் விழாவில் பங்கேற்க தவெக தலைவரும், முதல்வருமான விஜய் வருகை தந்துள்ளார்.

முதலமைச்சரான பிறகு தவெக தலைமை அலுவலகத்துக்கு 2வது முறையாக விஜய் வருகை தந்துள்ளார்.

தவெகவில் இணைந்தவர்களுக்கு புதிய பொறுப்பு, பதவிகள் வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.

திமுக எம்பி மகன் இணைவு

திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த் தவெகவில் இணைந்தார். அமைச்சர்கள் முன்னிலையில் தன்னை தவெகவில் இணைத்து கொண்டார் சந்தீப் ஆனந்த். திமுகவின் முக்கிய முகமாக இருக்கும் ஜெகத்ரட்சகனின் மகன் தவெகவில் ஐக்கியம் ஆனார்.

மாற்றுக்கட்சியினர் இணைவு

சென்னை பனையூரில் உள்ள தவெக்க அலுவலகத்தில் கட்சியின் பொதுசெயலாளர் ஆனந்த் முன்னிலையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர் பலர் கட்சியில் இணைந்தனர்.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கீதா மணிவண்ணன் ( கிருஷ்ணராபுரம்). மணிவண்ணன் (கரூர்), வி.பி.கலைராஜன் (திமுக), நிலக்கோட்டை அன்பழகன், பாண்டியம்மாள் (உசிலம்பட்டி. கன்டோன்மெண்ட் சண்முகம் (ஆலந்தூர்) திமுக, ஜெயசீலன் (கூடலூர்), சின்னசாமி (அண்ணா தொழிற்சங்க பேரவை முன்னாள் செயலாளர் மற்றும் பிரபாகரன், பார்த்திபன், பையூர் சந்தானம் ஆகிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவெகவில் இணைந்தனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் தவெகவில் இணைந்தார்.

அமைச்சர் என்.ஆனந்த் முன்னிலையில் நடிகர் ரவி மரியா தவெகவில் இணைந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com